பக்கங்கள்

வியாழன், அக்டோபர் 01, 2009

பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

இன்று மதுரைக்கு செல்கின்றேன். எங்கள் கல்லுரியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அங்கு என் பழைய நண்பர்களையும், இவ் விஷயத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நண்பர்களையும் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவே மனதில் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. இதன் தொடர்ச்சியாக எங்கள் வகுப்பின் தோழர்கள் இருபத்தைந்து ஆண்டு நிறைவினை 2012 ஆம் ஆண்டு வெள்ளி விழாவாக கொண்டாட இருப்பதின் முதல் சந்திப்பினையும், அதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க இருக்கின்றோம். இந் நிகழ்ச்சியினை சிறந்த முறையில் நடத்தி வெற்றியை ஏற்படுத்த வேண்டும் என மனதில் ஆர்வம் எழுகிறது. இறையின் துணையுடன் இதில் வெற்றி காண்போம் என்ற திடமான நம்பிக்கையும் உள்ளது.