இன்று ஆதம்பாக்கத்தில் நடந்த சுவாமி ஓம்காராநந்தா அவர்களின் சொற்பொழிவுக்கு சென்று இருந்தேன். அவர் மிக எளிய தமிழில் ஆன்மிக விஷயங்களை விளக்கிக் கொண்டு இருந்தார். அவற்றில் திருக்குறள் மிக அழகாக விளக்கப் பெற்றது. அது கண்டு 'கான மயிலாட கண்டிருந்த வான் கோழி போல்' அவ்வப்போது என் வாழ்வில் இடம்பெறும் மற்றும் தோன்றும் நிகழ்ச்சிகளைக் கொண்டு குறளுக்கு விளக்கம் எழுத எண்ணியுள்ளேன். (பாவம் திருக்குறளுக்கு வந்த சோதனை). வழக்கம் போல் லொள்ளு பிடித்த உதாரணத்துடன் துவக்குகிறேன். எனது விளக்கத்தின் முதல் குறள்.
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்'
எதில் எதில் இருந்து நம் மனம் விலகிக் கொள்கிறதோ அதில் இருந்து நமக்கு துன்பம் ஏற்படுவதில்லை என்பது இக்குறளின் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இக்குறள் ஸம்ஸ்க்ருத மொழியில் 'நிரோஷ்டம்' என்றும், தமிழில் 'இதழகல்' என்றும் வழங்கப் படும் அமைப்பில் அமைந்துள்ளது. இக்குறளை கூறும்பொழுது உதடுகள் ஒட்டாது என்பது இதன் சிறப்பு. (உடனே நான் தமிழகப் பேருந்தில் எழுதியுள்ளதனை கூறுகின்றேன் என நினைத்தால் நான் பொறுப்பில்லை).
இன்று அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நண்பர் 1 தனது அலைபேசியில் ஒரு ஜோதிடர் பலன் சொல்வதாகக் கூறினார். ஆசை யாரை விட்டது? ஆவலுடன் என்ன விஷயம் என்று கேட்டேன். உடனே அவர் அலை பேசியை இயக்கினார். ஒரு அன்பர் மிக அழகிய குரலில் என் பெயர், என் பிறந்த தேதி, பேசும் ஊர், ராசி முதலியவை கேட்க ஆவலுடன் முதல் மூன்று விஷயம் கூறியவன் சற்று இதில் ஏதோ (வில்லங்கம்) குறும்புத்தனம் இருக்கிறது என்று மிக தாமதமாக முடிவுக்கு வந்தவன் நான்காவது விஷயம் கூறவில்லை. ஆனால் அந்த அலைபேசி அன்பர் தனது இனிய குரலில் வண்டை வண்டையாக திட்ட ஆரம்பித்து விட்டார். நான் சற்றே அதிர்ந்து விட்டேன். ஏனெனில் அந்நிமிடம் வரை அதில் இருந்து தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இருந்தேன். அதில் இருந்து ஆர்வத்தை விலக்கியவுடனே அது (வக்கிரமான) குறும்பு என்றாலும், நான் முட்டாள்தனமாக ஆசையின் காரணமாக அந்த வலையில் விழுந்ததை எண்ணி சிரித்து விட்டேன். (இதற்கு இன்னொரு பெயர் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது). நான் மட்டும் அவதிப் பட்டால் போறுமா? மற்றவர் யாராவது ஒருவரை வீழ்த்தினால் மட்டுமே நம் மனம் அமைதியுறும் என்ற உயர் சிந்தையுடன் மற்றொரு நண்பர் 2 ஐ மாட்டி விட்டேன். அய்யா மிக அழகிய ஜோதிடம் ஒன்று, இலவசமாய் கேளும் என்று. அவரும் ஆர்வமாய் எல்லா விஷயமும் கூற ஆரம்பித்தது வினை. திட்டியது 'recorded message' அதற்கும் என் நண்பர் அதே போன்ற, அச்சில் இட முடியாத வார்த்தையில், பதிலடி கொடுக்க என் வயிறு நோக, அவர் மனம் நோக சிரித்தேன். அவரும் இது சற்றே கனமான சூழ்நிலை என்று அறிந்து இருந்தாலும் மனதினை தேற்றிக் கொண்டு எங்களுடன் இச்சிரிப்பில் கலந்து கொண்டார். இச்செயலுக்கு நான் இத்தளத்தின் மூலம் அவரிடமும் அண்டவனிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். எப்படி இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டியவுடன் மனம் துன்பப் பட்டது, அதில் இருந்து மனம் விலகியவுடன் மகிழ்ச்சி அடைகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை தன் குறளில் எளிமையாய் கூறியுள்ளார். மீண்டும் குறளை கூறுவோம்
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் இன்று அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நண்பர் 1 தனது அலைபேசியில் ஒரு ஜோதிடர் பலன் சொல்வதாகக் கூறினார். ஆசை யாரை விட்டது? ஆவலுடன் என்ன விஷயம் என்று கேட்டேன். உடனே அவர் அலை பேசியை இயக்கினார். ஒரு அன்பர் மிக அழகிய குரலில் என் பெயர், என் பிறந்த தேதி, பேசும் ஊர், ராசி முதலியவை கேட்க ஆவலுடன் முதல் மூன்று விஷயம் கூறியவன் சற்று இதில் ஏதோ (வில்லங்கம்) குறும்புத்தனம் இருக்கிறது என்று மிக தாமதமாக முடிவுக்கு வந்தவன் நான்காவது விஷயம் கூறவில்லை. ஆனால் அந்த அலைபேசி அன்பர் தனது இனிய குரலில் வண்டை வண்டையாக திட்ட ஆரம்பித்து விட்டார். நான் சற்றே அதிர்ந்து விட்டேன். ஏனெனில் அந்நிமிடம் வரை அதில் இருந்து தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இருந்தேன். அதில் இருந்து ஆர்வத்தை விலக்கியவுடனே அது (வக்கிரமான) குறும்பு என்றாலும், நான் முட்டாள்தனமாக ஆசையின் காரணமாக அந்த வலையில் விழுந்ததை எண்ணி சிரித்து விட்டேன். (இதற்கு இன்னொரு பெயர் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது). நான் மட்டும் அவதிப் பட்டால் போறுமா? மற்றவர் யாராவது ஒருவரை வீழ்த்தினால் மட்டுமே நம் மனம் அமைதியுறும் என்ற உயர் சிந்தையுடன் மற்றொரு நண்பர் 2 ஐ மாட்டி விட்டேன். அய்யா மிக அழகிய ஜோதிடம் ஒன்று, இலவசமாய் கேளும் என்று. அவரும் ஆர்வமாய் எல்லா விஷயமும் கூற ஆரம்பித்தது வினை. திட்டியது 'recorded message' அதற்கும் என் நண்பர் அதே போன்ற, அச்சில் இட முடியாத வார்த்தையில், பதிலடி கொடுக்க என் வயிறு நோக, அவர் மனம் நோக சிரித்தேன். அவரும் இது சற்றே கனமான சூழ்நிலை என்று அறிந்து இருந்தாலும் மனதினை தேற்றிக் கொண்டு எங்களுடன் இச்சிரிப்பில் கலந்து கொண்டார். இச்செயலுக்கு நான் இத்தளத்தின் மூலம் அவரிடமும் அண்டவனிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். எப்படி இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டியவுடன் மனம் துன்பப் பட்டது, அதில் இருந்து மனம் விலகியவுடன் மகிழ்ச்சி அடைகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை தன் குறளில் எளிமையாய் கூறியுள்ளார். மீண்டும் குறளை கூறுவோம்
அதனின் அதனின் இலன்'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக