பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

தில்லி வாழ்க்கை 1

              கீழ் நிலை எழுத்தர் என்ற நிலையில் இருந்து மேல் நிலை எழுத்தர் என்ற பதவி உயர்வு கிடைத்தது. பல ஆண்டுகளாக குடும்ப சூழ்நிலை காரணமாக மறுத்து வந்த பதவி உயர்வினை ஏற்பது என்று முடிவு செய்து ஜூன் மாதம் மூன்றாம் தேதி (தலைவர் கலைஞர் ?) பிறந்த நாள் அன்று சென்னை விட்டு ராஜதானி வண்டி மூலம் நான்காம் தேதி தில்லி வந்து அடைந்தேன். வந்தவுடனேய திரு. சுரேஷ் குமார் அவர்களுடன் இரண்டு நாட்கள் ஹரித்வார் ரிஷிகேஷ் போன்ற புனித தலங்களுக்கு சந்திர கிரஹணத்தை முன்னிட்டு சென்று இருந்தேன். ரிஷிகேஷத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தோம். மிக அழகிய சூழல். சந்திர கிரஹணத்தன்று இரவு முழுவதும் விழிக்கவில்லை என்றாலும், சிறிது நேரம் கண் அயர்ந்து விட்டு, கிரஹணம் விடும் சமயத்தில் எழுந்து சிறிது காயத்ரி ஜபம் செய்து, கங்கையில் ஸ்னானம் செய்து, அங்கு தில்லி சரோஜினி நகர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்து இருந்த வேத வித்துக்களுக்கு திரு. சுரேஷ் குமார் அவர்களுடன் இணைநது தக்ஷிணை குடுத்து  சந்திர கிரஹணத்தை கொண்டாடினேன்(?).

கருத்துகள் இல்லை: