பக்கங்கள்

புதன், மார்ச் 03, 2010

நித்தியானந்தம்


இன்றைய விஷயமே நித்தியானந்தமேதான். இவருடைய செயல் ஹிந்து தர்மத்திற்கு எதிராக அமைந்து விட்டது. காமம் என்பது பொதுவான விஷயம், இதனை இறைவனும் வென்றதாக நம் முன்னோர்கள் கூறவில்லை. அப்படி இருக்க சாதாரண மனிதர் இவரா வென்றுவிடப் போகிறார். மனதில் எப்பொழுது ஆசை தோன்றுகிறதோ, அப்பொழுதே இவர் அதனைக் கடக்க முயன்று இருக்க வேண்டும். முடியவில்லையா, கச்சேரியை முடித்துவிட்டு, கல்யாணக் கச்சேரியை தொடங்கிற் இருக்க வேண்டும்.

ஹிந்து தர்மம் திருமணத்தை எதிர்க்கவில்லையே? திருமணமான, இல்லறத்தார்களே மேல் என்று சொல்கிறது. எனவே, ஹிந்து தர்மத்திற்கு எதிராக நடந்து கொண்ட இவருக்கு ஹிந்து தர்மம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது? அதற்கு வழி எதுவும் இல்லை. போகட்டும், இனியேனும், இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்க நம் தர்ம ஆசாரியர்கள் (யார் தலைமையை யார் ஏற்பார்கள்?) ஒன்று கூடி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நடக்குமா?

வழி காட்டும் குருவின் தனிப்பட்ட வாழ்கையினை கேள்வி கேட்காமல் இங்கு எப்படி இருக்க முடியும்? மனதினை கட்டுப்படுத்த வழி கட்டும் ஒருவர், மனம் போன போக்கில் போகின்றார். அப்பொழுது இவர் உண்மையான சத்குருவாய் இருக்க வழி இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது. இனியும் இவரை நம்பி இவர் வழி தொடர்ந்த சிஷ்யக் கோடிகளின் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமானது. இந்த இக்கட்டிலிருந்தும் ஹிந்து தர்மம் மீண்டு வர இறைவன் அருள் புரிவாராக.

திங்கள், மார்ச் 01, 2010

அம்மாவின் அன்பு


மதுரை தோழன் தினேஷ் அனுப்பிய ஒரு சிறு sms கதை.

மூளைக் கட்டியினால் அவதியுற்ற ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளின் சுற்றத்தாரும், சிறிய வயது மகனும், மற்றோரும் அவளை சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து, அவள் உயிர் பிரிந்து விடுகிறது. தாயின் பிரிவு தாங்காமல் மகன் கதறி அழுகின்றான். நாள் முழுதும் அழுத காரணத்தினால் உடல் நலக் குறைவும் ஏற்படுகிறது. அவளின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்தப் பின் வீட்டிற்கு வந்தபின், அச்சிறுவன் தாயின் அலமாரியினைத் திறந்துப் பார்க்கின்றான். அங்கே அவன் தாய் ஒரு மருந்துப் பட்டியுடன், சிறு கடிதம் ஒன்றும் எழுதி இருக்கிறாள். "மகனே, நீ அதிகம் அழுதால் உனக்கு சளிப் பிடிக்கும். நீ நேற்று அதிகம் அழுது இருப்பாய் என்று தெரியும், இந்த மருந்தினை எடுத்துக் கொள். இனி அதிகம் அழாதே" என்று எழுதி இருந்தது.
இதுவே தாயின் அன்பு.

வியாழன், பிப்ரவரி 18, 2010

மன வருத்தம்

சில நாட்களுக்கு முன் எனது நண்பர்களுடன் தேநீர் அருந்த சென்று இருந்தேன். நாங்கள் மூன்று நண்பர்கள் இருந்தோம். அப்பொழுது சில விஷயங்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, ஒரு நண்பர் சற்று அநாகரீக முறையில் சில வார்த்தைகளைக் கூறினார். அது அவருக்கு, சாதரணமான விஷயமாகவோ, அல்லது நகைச்சுவை என்றோ அவர் கருதி இருக்கக் கூடும். இது போன்றே இச்சம்பவத்திற்கு சில மாதங்கள் முன்னர் மற்றொரு நண்பர் முன்னிலையில் இதே வார்த்தைகளை கூறி என் மனத்தை புண்படுத்தினர். அதற்கு என் கண்டனத்தைக் கூறியும் நாகரீகம் என்பது சிறிதும் இன்றி மீண்டும் அதே சொற்களை வேறொரு மரியாதைக்குரிய நண்பர் முன் கூறி என் மனத்தை காயப் படுத்தி விட்டார்.
நான்
எப்பொழுதும் விஷயங்களை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை, என்றாலும், என் முந்தைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் இவ்வாறு நடந்து கொண்டு விட்டார். இவ்விஷயம் உடன் இருந்த நண்பருக்கும், முன்னர் இவர் மற்றொரு நண்பர் முன்னர் அவமானம் செய்தார் என்று சொன்னேன் அல்லவா? இவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. இது குறித்து, பதிவு எதுவும் இட விரும்பாமல்தான் இருந்தேன். அனால் மனித மனங்களுக்குள் இருக்கும் விகார சிந்தையை எழுத வேண்டும் என விரும்பியதால் இதனை பதிவிட்டுள்ளேன்.
இப்பதிவின்
துவக்கத்தில் நண்பர் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் இப்பொழுது அதற்கான தகுதியை இழந்து யாரோ ஒருவர் ஆகிவிட்டார். இத்தனைக்கும் அவர் உயர் பதவி வகிக்கும் ஒரு அதிகாரி, ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டவர் என்பது மனதை வேதனை அடையச் செய்யும் விஷயங்கள். இவர் போன்ற மனிதர்கள் திருந்தவேண்டும் என இறைவனை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நகைச்சுவை என்பது, பிறர் மனம் நோகாது இருக்க வேண்டும், மற்றவர் உடல் குறை, தகுதிக் குறை, செல்வக்குறை போன்றவற்றை சுட்டிக் காட்டி மகிழும் குணம் எவ்வளவு மட்டமானது என்பதை இவர் போன்றவர்கள் உணரப் போவது எப்போது?