பக்கங்கள்

புதன், மார்ச் 03, 2010

நித்தியானந்தம்


இன்றைய விஷயமே நித்தியானந்தமேதான். இவருடைய செயல் ஹிந்து தர்மத்திற்கு எதிராக அமைந்து விட்டது. காமம் என்பது பொதுவான விஷயம், இதனை இறைவனும் வென்றதாக நம் முன்னோர்கள் கூறவில்லை. அப்படி இருக்க சாதாரண மனிதர் இவரா வென்றுவிடப் போகிறார். மனதில் எப்பொழுது ஆசை தோன்றுகிறதோ, அப்பொழுதே இவர் அதனைக் கடக்க முயன்று இருக்க வேண்டும். முடியவில்லையா, கச்சேரியை முடித்துவிட்டு, கல்யாணக் கச்சேரியை தொடங்கிற் இருக்க வேண்டும்.

ஹிந்து தர்மம் திருமணத்தை எதிர்க்கவில்லையே? திருமணமான, இல்லறத்தார்களே மேல் என்று சொல்கிறது. எனவே, ஹிந்து தர்மத்திற்கு எதிராக நடந்து கொண்ட இவருக்கு ஹிந்து தர்மம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது? அதற்கு வழி எதுவும் இல்லை. போகட்டும், இனியேனும், இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்க நம் தர்ம ஆசாரியர்கள் (யார் தலைமையை யார் ஏற்பார்கள்?) ஒன்று கூடி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நடக்குமா?

வழி காட்டும் குருவின் தனிப்பட்ட வாழ்கையினை கேள்வி கேட்காமல் இங்கு எப்படி இருக்க முடியும்? மனதினை கட்டுப்படுத்த வழி கட்டும் ஒருவர், மனம் போன போக்கில் போகின்றார். அப்பொழுது இவர் உண்மையான சத்குருவாய் இருக்க வழி இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது. இனியும் இவரை நம்பி இவர் வழி தொடர்ந்த சிஷ்யக் கோடிகளின் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமானது. இந்த இக்கட்டிலிருந்தும் ஹிந்து தர்மம் மீண்டு வர இறைவன் அருள் புரிவாராக.

கருத்துகள் இல்லை: