பக்கங்கள்

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

கதையும் கருத்தும்

       இந்தக் கதை மகா பாரதத்தில் வருகிறது என்று இக்கதையை எங்கோப் படித்தேன்.  உலகில் அதிகமான இடைச்செருகல், மற்றும் இதில் உள்ளது எனக் கூறி பல்வேறு குட்டிக் கதைகள் இருப்பது பாரதத்திற்குத்தான். அது போல் இதுவும் ஒன்று.  ஆனாலும் எதோ ஒரு கருத்தை உணர்த்துவது போல் இருந்தது.  இதோ கதை.



             ஒரு முறை பீமனும் கண்ணனும் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டு இருந்தார்கள். இரவு நேரம் வந்தது. இரவுப் பொழுதில் முதல் பகுதியில் பீமனும், இரண்டாம் பகுதியில் கண்ணனும் காவல் காப்பது என முடிவு செய்யப் பட்டது.  கண்ணன் கண் வளர்கையில், பீமனிடம் ஒரு பிரம்ம ராக்ஷசன் (தான் கற்றக் கல்வியினை பிறருக்குக் கற்றுத் தராத பிராமணனே பிரம்ம ராக்ஷசன் ஆகிறான் என்பது நம்பிக்கை).  வந்து என்னோடு சண்டையிடு என்று பீமனை அழைத்த அவன், விரற்க்கடை அளவே இருந்தான். 




பீமன் கோபம் கொண்டு உன்னோடு நான் சண்டையிடுவதா என்றவுடன், அவன் வளர ஆரம்பித்தான்.  அவனோடு பீமன் சண்டையிட, சண்டையிட அவன் அளவு கூடிக் கொண்டே சென்றது.  சண்டையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.  தூங்குபவரை அந்த பிரம்ம ராக்ஷசன் ஒன்றும் செய்ய மாட்டன் என்பதால் கண்ணனுக்கு இல்லைப் பிரச்னை. 

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

இராமாயணம்

          

            இராமாயணம் தமிழில் இரு சொற்களில் சொல்லச் சொன்னால், ஒரு கல் மேலே சென்று கீழ் வருவதற்குள்ளாக சொல்லவேண்டும் எனச் சொன்னால் இப்படிச் சொல்வார்கள். "விட்டான் இராமன் செத்தான் இராவணன்" என.  இது என்னவாய் இருக்கும் என யோசித்துப் பார்த்தால் முழுக்கதையையும் இதற்குள் சுருக்கி விட்டார்கள் என எனக்குப் புரிந்தது. எனக்குப் புரிந்ததை இங்கே பகிர்கின்றேன்