இராமாயணம் தமிழில் இரு சொற்களில் சொல்லச் சொன்னால், ஒரு கல் மேலே சென்று கீழ் வருவதற்குள்ளாக சொல்லவேண்டும் எனச் சொன்னால் இப்படிச் சொல்வார்கள். "விட்டான் இராமன் செத்தான் இராவணன்" என. இது என்னவாய் இருக்கும் என யோசித்துப் பார்த்தால் முழுக்கதையையும் இதற்குள் சுருக்கி விட்டார்கள் என எனக்குப் புரிந்தது. எனக்குப் புரிந்ததை இங்கே பகிர்கின்றேன்
தவ வலிமையுடைய நல்ல முனிவனுக்குப் பிறந்த ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் எனச் சிறந்த தம்பியருடயவன், குபேரனை வென்று இலங்கையை கைப்பற்றினவன், கயிலாய மலையை தன் இருபது தோள்களிலும் தாங்கி தூக்க முயன்ற வலிமைசாலி, அழுத்திய இறைவனை தன் சாம கானத்தால் மயக்கியவன், ஈசனுக்கு இணையாக ஈஸ்வரப் பட்டம் பெற்றவன், தசரதன் எவ்வாறு தன் நாட்டுக் குடிமக்களை நன்றாகப் பேணி வந்தானோ அதைப் போன்று தன நாட்டு மக்களைப் பேணியவன், முக்காலமும் இறைவனைப் பணிந்து வந்தவன், இறப்பு என்பதை இறக்கச் செய்து இருந்தவன், கற்புக்கரசியினை மனைவியாய் வாய்த்தவன் - இவ்வளவு சிறப்பு இருந்தும் மாற்றான் மனைவியை நோக்கினான் அதனால் செத்தான்.
முதலில் என் மனத்தில் தோன்றியது ராஜ்யத்தை, சீதையை, அம்பை விட்டான் என மூன்றுக் கருத்துக்கள் தோன்றின. அதன் பின்னர் இது மேலும் மேலும் புதுப் புதுக் கருத்துக்களைத் தோற்றுவித்தது அவையே பின்வருவன.
தேவருலகத்தாரைக் காக்க, மானுட தருமம் உலகினர்க்குக் காட்ட, இராமனாய் அவதரிக்க வைகுண்டம் விட்டான், வசிட்டனிடம் பாடம் பயின்று, செய்முறைப் பயிற்சிக்காய் விசுவாமித்திரனுடன் சென்று தாடகையும், சுபாகுவும் மரிக்க அம்பை விட்டான், பின் தேவைக்காய் மாரீசனை உயிரோடு விட்டான், அன்னை சீதையை மணக்க வில்லை உடைத்து விட்டான், பரசு ராமனின் கர்வத்தை சிதைத்து விட்டான், தந்தை சொல் காக்க, சிற்றன்னை மனம் குளிர, ராஜ்யத்தை விட்டான். சாதாரணன் குகனுக்கு தன நட்பை கொடுத்து விட்டான். சீதையை காட்டில் தவற விட்டான், சபரியின் முக்தியை கண்டு விட்டான், சுக்ரீவனை சந்தித்து அவனுக்கு ராஜ்யத்தை உறுதி செய்து விட்டான், ஏழு மரா மரங்களையும், வாலியின் மார்பையும் துளைத்து விட்டான், பாலம் கட்டி விட்டான், விபீஷணனுக்கு ராஜ்யம் முன்னமே தந்து விட்டான், கும்பகர்ணனும், ராவணனும் மடிய அம்பை விட்டான்.
இப்படிப் பட்ட கல்யாண குணங்களைக் கொண்ட இராமனை நம்பினவர்களை அவன் கை விட்டான் என்றப பழிச் சொல்லினை ஏற்க மாட்டான். அவன் புகழ் பாடி, அவனின் குணத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் நம் வாழ்வில் கடைப்பிடித்து அவன் அடி ஏகுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக