
1891 ஆம் ஆண்டு இந்நாளில்தான் சுவாமி விவேகனந்தர் சிகாகோ மாநகரத்தில், தொடர்ந்த கைத்தட்டலைப் பெற்ற "அமெரிக்க நாட்டு சகோதரர்களே, சகோதரிகளே" என்ற ஒரு சொல்லிலேயே சொல்ல வந்த அனைத்தையும் சொல்லி, பாரதத்தின் தொன்மையான தன்மையினை தன்மையாய் எடுத்து இயம்பிய நாள். இந்நாளில் அவரின் பாதம் தொட்டு வணங்குவோம்.

1921 ஆம் ஆண்டு இந்நாளில்தான் தன் இறுதி யாத்திரைக்கு ஏழே நபர்களை மட்டும் கொண்டு இருந்தாலும், தமிழக மக்களால், Royal singular ஆக "அவன்" என்று சொல்லப்படும் பாரதியார் இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்த நாள். அவனுடை கவிதைகள் இன்றும் புத்துணர்வு ஊட்டுவதாய், புதுப் புது அர்த்தங்களைக் கொடுப்பதாய், என்றும் இனியதாய் விளங்குகின்றன. இவர்கள் இருவரும் நம் நாட்டின் பெருமையை உயர்த்தினர். ஆட்சியாளர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தான் பாரதி. ஆனாலும் அதற்காய் நம் தேசத்தை இழிவு செய்தான் இல்லை. இன்று முளைத்துள்ள ஊழல் எதிர்ப்புப் போராளிகளில் ஒருவர் நம் பாராளுமன்றத்தை கழிப்பிடமாயும், தேச சின்னத்தில் விளங்கும் அரிமாக்களை நரியாகவும் சித்தரித்து கேலி சித்திரம் வரைந்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலின் மூலம், நம் நாட்டில் எத்தனையோ முறை கட்டிய தீவிரவாதத்தின் கோர முகத்தை அமெரிக்க நாட்டிற்கு காண்பித்த நாள். இதனாலேயே பத்தாண்டு கழித்து தன் உயிரை கோரமாய் இழந்தான் அகில உலகத் தீவிரவாதி ஒசாமா. அமெரிக்க நாட்டிற்கும் இருந்த இறுமாப்பும் உடைந்த நாள்தான் இது.

ரொம்ப சீரியஸா போயிகிட்டிருக்கா. கவலையேப் படாதீங்க, சூர்யா ஜோதிகா கல்யாணம் இதே நாள்ல 2006 ஆம் ஆண்டு நடந்ததை நெனச்சு சந்தோஷப் படுங்க.
1 கருத்து:
Good collection of events nicely presented.
I am the great admirer of "Bharathi" and greatly influenced by the principles of "Swamiji".
Thanks for sharing the post about the great Scholoars.
கருத்துரையிடுக