பக்கங்கள்

வியாழன், பிப்ரவரி 18, 2010

மன வருத்தம்

சில நாட்களுக்கு முன் எனது நண்பர்களுடன் தேநீர் அருந்த சென்று இருந்தேன். நாங்கள் மூன்று நண்பர்கள் இருந்தோம். அப்பொழுது சில விஷயங்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, ஒரு நண்பர் சற்று அநாகரீக முறையில் சில வார்த்தைகளைக் கூறினார். அது அவருக்கு, சாதரணமான விஷயமாகவோ, அல்லது நகைச்சுவை என்றோ அவர் கருதி இருக்கக் கூடும். இது போன்றே இச்சம்பவத்திற்கு சில மாதங்கள் முன்னர் மற்றொரு நண்பர் முன்னிலையில் இதே வார்த்தைகளை கூறி என் மனத்தை புண்படுத்தினர். அதற்கு என் கண்டனத்தைக் கூறியும் நாகரீகம் என்பது சிறிதும் இன்றி மீண்டும் அதே சொற்களை வேறொரு மரியாதைக்குரிய நண்பர் முன் கூறி என் மனத்தை காயப் படுத்தி விட்டார்.
நான்
எப்பொழுதும் விஷயங்களை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை, என்றாலும், என் முந்தைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் இவ்வாறு நடந்து கொண்டு விட்டார். இவ்விஷயம் உடன் இருந்த நண்பருக்கும், முன்னர் இவர் மற்றொரு நண்பர் முன்னர் அவமானம் செய்தார் என்று சொன்னேன் அல்லவா? இவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. இது குறித்து, பதிவு எதுவும் இட விரும்பாமல்தான் இருந்தேன். அனால் மனித மனங்களுக்குள் இருக்கும் விகார சிந்தையை எழுத வேண்டும் என விரும்பியதால் இதனை பதிவிட்டுள்ளேன்.
இப்பதிவின்
துவக்கத்தில் நண்பர் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் இப்பொழுது அதற்கான தகுதியை இழந்து யாரோ ஒருவர் ஆகிவிட்டார். இத்தனைக்கும் அவர் உயர் பதவி வகிக்கும் ஒரு அதிகாரி, ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டவர் என்பது மனதை வேதனை அடையச் செய்யும் விஷயங்கள். இவர் போன்ற மனிதர்கள் திருந்தவேண்டும் என இறைவனை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நகைச்சுவை என்பது, பிறர் மனம் நோகாது இருக்க வேண்டும், மற்றவர் உடல் குறை, தகுதிக் குறை, செல்வக்குறை போன்றவற்றை சுட்டிக் காட்டி மகிழும் குணம் எவ்வளவு மட்டமானது என்பதை இவர் போன்றவர்கள் உணரப் போவது எப்போது?

கருத்துகள் இல்லை: