என் நண்பர் திரு சுதர்சனன் அவர்கள் கூறிய SMS சிறுகதை இது.
புதியதாக கார் ஒன்றை வாங்கிய ஒருவன், வண்டி வாங்கிய இரு தினங்கள் கழித்து தன் புது வண்டியினை ஆசையுடன் துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் மகன் சந்தோஷ கூச்சலிட்டுக் கொண்டே வண்டியின் அடுத்த பக்கம் செல்கிறான். சிறிது நேரம் கழித்து அப்புறத்தில் இருந்து க்ரீச் க்ரீச் என சப்தம் வருவதை கேட்டு வண்டியின் அடுத்த பக்கம் சென்று பார்க்கையில் மகன் வண்டியில் spaner ஐ வைத்து கீறிக் கொண்டு இருக்கிறான். ஆத்திரத்துடன் அவன் கையில் உள்ள spaner ஐ கொண்டே அவன் கையில் அடித்து விட, கை வீக்கம் கண்டு விட்டது என்று டாக்டரிடம் அழைத்து செல்கிறான். மகன் வலியால் அவதி படுகின்றான். அதனை காண மனம் பொறுக்காமல் வருத்தத்துடன் மருத்துவமனை விட்டு வெளியேறி, வெளியில் நிறுத்தி இருக்கும் வண்டியில் மகன் என்ன கிறுக்கியிருக்கிறான் என்று பார்க்க அதில் எழுதி இருந்தது, "I LOVE U DAD".
(கதைக்காக படம் நெட்டில் சுடப்பட்டது)

1 கருத்து:
தாமதமான கருத்துக்கு மன்னிக்கவும்.
சிறு வயதில் குழந்தைதானே என்று நாம் நடந்துகொள்ளும் பல்வேறு விதங்கள் மிகப்பெரிய விளைவுகளையும் குழந்தைகளின் மனத்தில் பெரிய அளவு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது. அந்த சமயம் அடித்தால் தான் தீர்வு என்று தோன்றும் விஷயம், அடுத்த கணமே வருத்தத்தை விளைவிக்கும்.
அந்தக்காலத்து பழமொழியான "அடியாத மாடு படியாது" என்பதெல்லாம் சும்மா எதுகை மோனைக்காக யாராவது சொல்லியிருப்பார்கள்.
இந்த கதையிலேயே பார்க்கலாம், வண்டியில் கீறல் என்னமோ விழுந்துவிட்டது, அந்த ஒரு வருத்தத்தோடு போயிருக்கும், குழந்தையை அடிக்க, அந்த வருத்தம், குழந்தை படும் அவதி ஒரு வருத்தம் என்று அடுக்கடுக்கான வருத்தங்களைச் சம்பாதித்ததுதான் மிச்சம்.
இது நிறைய பேருக்குத் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை.
கருத்துரையிடுக